1
00:00:02,000 --> 00:00:07,000
Downloaded from
YTS.MX

2
00:00:08,000 --> 00:00:13,000
Official YIFY movies site:
YTS.MX

3
00:00:42,251 --> 00:00:46,004
உங்க அலங்காரங்கள் எல்லாம்
கிறிஸ்துமஸ் மரத்துல அழகா தொங்கப் போகுது.

4
00:00:46,588 --> 00:00:50,050
யாருக்காவது வெட்டுவதுல உதவித்
தேவைப்பட்டா, கையைத் தூக்குங்க, சரியா?

5
00:00:58,851 --> 00:01:00,727
மக்களே, அழகா செய்திருக்கீங்க.

6
00:01:01,562 --> 00:01:05,190
இப்போ, இன்னிக்குதான் கடைசி
நாளானதால, நான் வில்லயமை

7
00:01:05,190 --> 00:01:08,068
இங்கே வரச்சொல்லி அவன் செய்ததை
அனைவருக்கும் காட்டும்படி கோருகிறேன்.

8
00:01:11,822 --> 00:01:12,990
சங்கோஜப்படாதே.

9
00:01:16,034 --> 00:01:17,286
எழுந்து வா.

10
00:01:17,911 --> 00:01:18,912
வா பார்ப்போம்.

11
00:01:36,180 --> 00:01:37,931
நல்லது, வில்லியம்.

12
00:01:37,931 --> 00:01:41,435
உன்னுடைய புது அலங்காரத்தை மரத்துல நீதான்
முதல்ல கட்டணும்னு நான் நினைக்கிறேன்.

13
00:01:41,435 --> 00:01:42,686
வாங்க எல்லோரும்.

14
00:02:00,913 --> 00:02:05,626
"ஒரு பை கேரட்டுகளை பார்த்ததுக்காக, ஏன்
அந்த குட்டி ஸ்னோமன் திட்டு வாங்கியது?

15
00:02:05,626 --> 00:02:07,503
எனக்குத் தெரியலையே. ஏன்?

16
00:02:07,503 --> 00:02:09,630
ஏன்னா அது மூக்கை நோண்டிட்டு இருந்தது.

17
00:02:11,548 --> 00:02:12,549
வில்லியம்.

18
00:02:15,636 --> 00:02:17,095
உங்க புதிய விட்டில் எல்லாம் நல்லா
இருக்கட்டும். நல்வாழ்த்துகள்.

19
00:02:17,679 --> 00:02:18,931
நாங்க உன்னை மிஸ் பண்ணுவோம்.

20
00:02:21,266 --> 00:02:24,228
உன் புதிய அறை ரொம்ப
பெரிசா இருக்கு, வில்லியம்.

21
00:02:24,770 --> 00:02:27,064
ஒரு பெரிய கிறிஸ்துமஸ் மரத்தை வைக்கும் அளவிற்கு

22
00:02:27,064 --> 00:02:29,066
வரவேற்பு அறையில நிறைய இடம் இருக்கு.

23
00:02:29,733 --> 00:02:32,653
உன்னுடைய விளையாட்டு சாமான்களை எல்லாம் வைக்க
ஒரு தனி விளையாட்டு அறையை செய்யப் போகிறோம்.

24
00:02:32,653 --> 00:02:34,488
அதோட அந்த தோட்டம் ரொம்ப அழகா இருக்கு.

25
00:02:34,488 --> 00:02:37,783
கீழே கொஞ்சம் வயல் காடுகளும்,
சில காடுகளும் இருக்கு.

26
00:02:37,783 --> 00:02:41,411
நிச்சயமா உன் புது வகுப்பையும் ஆசிரியர்களையும்
சந்திக்க நீ ரொம்ப ஆவலா இருப்பாயே, வில்லியம்.

27
00:02:41,411 --> 00:02:43,497
உன் ஆசிரியர் ரொம்ப நல்லவங்க.

28
00:02:43,497 --> 00:02:48,168
நிச்சயமா அங்கே உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும்,
ஒரு புது நண்பர் கிடைப்பதுல சந்தோஷமா இருப்பாங்க.

29
00:03:01,765 --> 00:03:02,933
சார்.

30
00:03:03,725 --> 00:03:07,062
இப்போ, எங்களுக்கு இந்த பெட்டிகளை
நகர்த்த உதவி செய்வாயா, இளைஞ்னே?

31
00:03:10,607 --> 00:03:12,276
மதிய வணக்கம், வில்லியம்.

32
00:03:12,276 --> 00:03:13,735
மோமோ!

33
00:03:14,278 --> 00:03:16,530
டிப். அந்த கதவின்
மரக்காலை தாண்டும்போது, ஜாக்கிரதை.

34
00:03:16,530 --> 00:03:17,865
ஹலோ, மேரி.

35
00:03:17,865 --> 00:03:19,324
மதிய வணக்கம், மக்களே.

36
00:03:19,324 --> 00:03:22,286
செட்டில் ஆக, உங்க பெற்றோர்களுக்கு
கொஞ்சம் அவகாசம் தருவோம்

37
00:03:22,286 --> 00:03:24,997
உனக்கும் கொஞ்சம் இடத்தைப்
புரிஞ்சுக்க நேரம் கிடைக்கும்.

38
00:03:55,444 --> 00:03:57,154
அது ரொம்ப பெரிசு, மோமோ.

39
00:03:57,154 --> 00:03:58,363
உற்சாகமா இருக்கு, இல்லையா?

40
00:03:58,363 --> 00:04:00,240
நிறைய சாகஸங்கள் செய்ய இடம் இருக்கு.

41
00:04:10,542 --> 00:04:12,544
- நாங்க இருவரும் விளையாடுவோம்.
- உண்மையாவா?

42
00:04:12,544 --> 00:04:14,671
சரி, நான் விளையாட முயற்சி செய்வேன்.

43
00:04:14,671 --> 00:04:16,298
அவங்க 18 பேருக்கு சமைக்கிறாங்க.

44
00:04:16,298 --> 00:04:18,382
நீங்க என்னுடன் வந்து ஸ்னோமன் செய்ய விரும்புறீங்களா?

45
00:04:18,382 --> 00:04:20,052
இப்போ இல்லை, கண்ணா.

46
00:04:20,052 --> 00:04:22,679
அந்த குழந்தைகள் அதைச் செய்தார்கள்.
எனக்கு இந்த சீசன் ரொம்ப பிடிக்கும்.

47
00:04:22,679 --> 00:04:24,515
- பிளீஸ், ஆம். உண்மையா.
- கேரோலின், நீ என்ன சொன்ன

48
00:04:24,515 --> 00:04:26,391
உன் தாயாருடன் கிறிஸ்துமஸை
கழிக்கப் போறன்னு சொன்னயா?

49
00:04:26,391 --> 00:04:27,476
ஆம்.

50
00:05:22,781 --> 00:05:25,409
நான் வில்லியம்.
நீங்க என்னுடன் விளையாட விரும்புறீங்களா?

51
00:05:28,787 --> 00:05:31,373
என் பெயர் வில்லியம்.
விளையாட விருப்பமா?

52
00:06:24,468 --> 00:06:27,596
"அன்பள்ள வில்லியம்
நாங்கள் உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறோம்

53
00:06:27,596 --> 00:06:31,892
அதோட உன் புதிய வீட்டில் நன்றாக இருக்க
எங்களுடைய நல்வாழ்த்துகள்.

54
00:06:31,892 --> 00:06:36,438
நிறைந்த அன்புடன், மேரி, ஆர்தர், போனீ,

55
00:06:36,438 --> 00:06:41,068
பால், லிஸ்ஸி, ஜேன், ஆலிஸ், ஜான்."

56
00:06:47,115 --> 00:06:50,619
இப்போது விளக்கை அணைக்கணும், வில்லியம், பிளீஸ்.
நாளைக்கு முக்கியமான நாள்.

57
00:07:43,297 --> 00:07:44,131
சரி!

58
00:07:48,677 --> 00:07:50,012
இனிய கிறிஸ்துமஸ், என் கண்ணே.

59
00:07:50,012 --> 00:07:53,849
இனிய கிறிஸ்துமஸ், மோமோ. நான் 7:00 மணிக்கு
படுக்கையிலிருந்து எழலாம்னு சொன்னீங்களே.

60
00:07:53,849 --> 00:07:55,559
நான் எவ்வளவு நேரமா காத்திருக்கேன்.

61
00:07:55,559 --> 00:07:57,186
நிச்சயமா 7:00 மணி ஆயிடுச்சா?

62
00:07:57,186 --> 00:07:58,687
நான் ஆறு முறை அடிப்பதைத்தானே கேட்டேன்.

63
00:07:58,687 --> 00:08:00,981
நான் ஏழு முறை அடிச்சதைக் கேட்டேன்,
மோமோ. உண்மையா!

64
00:08:00,981 --> 00:08:03,734
சரி, அப்போ 7:00 மணி ஆயிடுச்சா,
கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாரான்னு பார்க்கணும்.

65
00:08:03,734 --> 00:08:04,735
ஆம்!

66
00:08:06,320 --> 00:08:10,032
இது யாருக்காகவா இருக்குமோ.

67
00:08:18,081 --> 00:08:19,750
இனிய கிறிஸ்துமஸ், அன்பே.

68
00:08:21,502 --> 00:08:22,836
ஹலோ, முயல்குட்டி.

69
00:08:32,179 --> 00:08:33,514
முயல்குட்டி.

70
00:08:45,859 --> 00:08:47,402
நாம சாதிச்சுட்டோம், முயல்குட்டி.

71
00:08:57,120 --> 00:08:58,413
ஆம்.

72
00:08:59,665 --> 00:09:02,251
- இனிய கிறிஸ்துமஸ்.
- ஆம். நீ நல்லா இருக்கயா?

73
00:09:03,418 --> 00:09:05,420
- இனிய கிறிஸ்துமஸ். மிக்க நன்றி, விக்கார்.
- இனிய கிறிஸ்துமஸ்.

74
00:09:24,773 --> 00:09:25,774
அதெல்லாம் இல்ல.

75
00:09:28,694 --> 00:09:30,571
சரி, நீங்க அதை நகர்த்த அவசியமில்லை எனில்...

76
00:09:31,071 --> 00:09:32,614
பாரு, கண்ணா.

77
00:09:33,115 --> 00:09:34,533
இப்போ படுக்கும் நேரம்.

78
00:09:45,085 --> 00:09:46,086
என்...

79
00:09:47,462 --> 00:09:48,463
போதும்.

80
00:09:49,590 --> 00:09:51,258
இனிய கிறிஸ்துமஸ், அன்பே.

81
00:10:49,483 --> 00:10:52,486
மாலை வணக்கம் மற்றும் இனிய கிறிஸ்துமஸ்.

82
00:10:53,028 --> 00:10:55,280
இந்த விளையாட்டு அறைக்கு வருக.

83
00:10:55,280 --> 00:10:56,782
நான்தான் விவேகமானக் குதிரை.

84
00:10:56,782 --> 00:10:57,908
நீ யார்?

85
00:10:57,908 --> 00:11:01,411
நான்... சரி, நான் ஒரு முயல்குட்டி,
அப்படித்தான் தோணுது.

86
00:11:02,412 --> 00:11:04,748
விவேகமானக் குதிரையே, யார் அது?

87
00:11:04,748 --> 00:11:08,252
அது ஒரு புதிய பொம்மை. ஒரு முயல்குட்டி.

88
00:11:14,508 --> 00:11:15,342
இதோ வந்துட்டோம்.

89
00:11:15,342 --> 00:11:17,052
- பாருப்பா.
- எங்கே பார்க்கட்டும்.

90
00:11:17,052 --> 00:11:18,554
இதோ வந்தாச்சு.

91
00:11:22,015 --> 00:11:24,101
எனக்கு அது பெரிய விஷயமா தோணல.

92
00:11:24,101 --> 00:11:26,019
நீ என்ன சொல்ற, முயல்குட்டி?

93
00:11:26,019 --> 00:11:27,855
நீ உண்மையாவே பொம்மையா?

94
00:11:28,564 --> 00:11:29,815
எப்படி இருக்கணும்னு சொல்ற?

95
00:11:33,944 --> 00:11:36,947
நான் ஒரு உண்மையான காரைப் போல,
உலோகத்தால செய்யப்பட்டிருக்கேன்.

96
00:11:36,947 --> 00:11:40,742
ரெண்டு பக்கமும், இந்த சிறிய, கருப்பு
வட்டங்களைப் பார்க்க முடியுதா?

97
00:11:40,742 --> 00:11:44,121
- நிஜமான கார்களுக்கு அவை இருக்கும்.
- ஓ, ஆம்.

98
00:11:44,121 --> 00:11:46,874
பிசினஸ்ல நாங்க அதை வீல்ஸ்னு சொல்வோம்.

99
00:11:47,749 --> 00:11:48,834
வீல்ஸ்.

100
00:11:49,585 --> 00:11:51,461
அதோட, கடைசியா இன்னொண்ணு...

101
00:11:51,461 --> 00:11:55,090
சிங்கம், என்னை கொஞ்சம் சாவி கொடு.

102
00:11:59,386 --> 00:12:02,848
எங்கிட்ட உண்மையான, நல்லா இயங்கும் மோட்டர் உள்ளது.

103
00:12:02,848 --> 00:12:07,978
அந்தச் சிறுவன் எனக்கு சாவி கொடுத்தால் போதும்,
நான் அவனை சூம்முன்னு கடந்துச் செல்வேன்.

104
00:12:10,689 --> 00:12:11,690
அப்படி.

105
00:12:12,274 --> 00:12:14,610
- ஜாக்கிரதை.
- ஜாக்கிரதை!

106
00:12:14,610 --> 00:12:16,028
வழியை விடுங்க!

107
00:12:18,071 --> 00:12:19,698
இது ரொம்ப நெருக்கமா வந்தது.

108
00:12:19,698 --> 00:12:22,201
இங்கே இருக்குற சிங்கமும் நிஜம்தான்.

109
00:12:22,201 --> 00:12:24,369
ஆம்! என் கால்களைப் பார்.

110
00:12:24,369 --> 00:12:28,582
அவை எல்லாம் உண்மையான சிங்கத்தைப் போலவே
இணைந்திருக்கு, நான் பூனை மாதிரி பாய்ந்து

111
00:12:28,582 --> 00:12:30,542
என் இரையைத் தேடிக்க முடியும்.

112
00:12:32,377 --> 00:12:34,254
அப்புறம் நான் நிஜமாவே ஒரு ராஜா.

113
00:12:34,254 --> 00:12:37,966
என் அற்புதமான ஆடைகளைப் பாரு
என் ஆச்சரியமான கிரீடம்.

114
00:12:37,966 --> 00:12:41,637
இந்த கற்கள் எல்லாம் உண்மையான
மரகதங்களும், ரூபிகளும்

115
00:12:41,637 --> 00:12:43,138
மரத்தால செய்யப்பட்டவை.

116
00:12:43,138 --> 00:12:47,434
எவ்வளவு தைரியம் இருந்தால், நீ விளையாட்டு
அறையின் ராஜாவிடம் அப்படிப் பேசுவாய்?

117
00:12:47,434 --> 00:12:50,854
நீ என் முன் தலை வணங்க வேண்டும் என
ஆணையிடுகிறேன், மூளையில்லா கிழட்டு விலங்கே.

118
00:12:52,856 --> 00:12:54,483
அல்லது வணங்க வேண்டாம்.

119
00:12:54,483 --> 00:12:58,862
விவேகமானக் குதிரை தலை வணங்க
வேண்டாம் என நான் உரைக்கிறேன்.

120
00:12:58,862 --> 00:13:02,741
மன்னிக்கணும், விவேகமானக் குதிரையே,
நான் எப்படி என்னை மறந்துடறேன்னு உனக்குத் தெரியும்.

121
00:13:02,741 --> 00:13:04,368
இந்த ஆடைகளாலதான்.

122
00:13:04,368 --> 00:13:06,745
அவை ரொம்ப அற்புதமா இருக்கு.

123
00:13:08,664 --> 00:13:10,624
இந்த புதிய பொம்மையைப்
பத்தி என்ன நினைக்கிறாய்?

124
00:13:10,624 --> 00:13:12,209
எனக்குப் பிடிக்கவில்லை.

125
00:13:12,709 --> 00:13:17,214
நாம இந்த முயல்குட்டிப் போல உள்ள பொம்மைக்கு,
இந்த பொம்மைப் பெட்டியில தூங்க இடம் தந்தால்,

126
00:13:17,214 --> 00:13:20,717
அது இரவுநேர பொம்மையா
தேர்ந்தெடுக்கப்படும் ஆபத்து இருக்கு.

127
00:13:21,802 --> 00:13:24,012
"இரவுநேர பொம்மை"னா என்ன?

128
00:13:25,389 --> 00:13:26,390
பெரும்பாலான இரவுகளில்,

129
00:13:26,390 --> 00:13:30,102
இந்த பொம்மைப் பெட்டியிலிருந்து அந்தச் சிறுவனின்
படுக்கைக்கு ஒரு பொம்மையை எடுத்துச் செல்வார்கள்.

130
00:13:30,102 --> 00:13:32,688
அந்தச் சிறுவன் எங்கே?
அவன் எப்போது திரும்பி வருவான்?

131
00:13:32,688 --> 00:13:34,398
கேள்விகள் எல்லாம் போதும்!

132
00:13:34,398 --> 00:13:36,233
நாம இப்போ ஒரு தீர்மானத்துக்கு வரணும்.

133
00:13:36,233 --> 00:13:41,446
இந்த பொம்மையிடம் எந்த இணைப்புகளோ
அல்லது அசையும் உறுப்புகளோ இல்லை.

134
00:13:41,947 --> 00:13:44,283
இதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை, சொல்றேன்

135
00:13:44,283 --> 00:13:47,744
அதோட அது விளையாட்டு அறையின்
அந்தக் கோடிக்கு போக வேண்டும்.

136
00:13:47,744 --> 00:13:50,539
- பாவம் அந்த பொம்மையை விட்டுடுங்க.
- நானும் ஒத்துக்குறேன்!

137
00:13:50,539 --> 00:13:51,582
ஒத்துக்குறேன்.

138
00:13:51,582 --> 00:13:52,749
அப்போ சரி.

139
00:13:53,375 --> 00:13:58,589
அந்த மூலைக்குப் போகலாம்
நீ காணாத இடத்தில் இருக்க வேண்டும்.

140
00:14:01,008 --> 00:14:02,092
இன்னும் தூரப் போ!

141
00:14:04,595 --> 00:14:06,430
இது ஒரு...

142
00:14:07,014 --> 00:14:10,017
நான் புதிதாக வந்தபோது,
ஒரு விதிமுறை இருந்தது.

143
00:14:10,017 --> 00:14:11,935
பொம்மைகள் தங்கள் முன்னால் வந்தவற்றை மதித்தன.

144
00:14:11,935 --> 00:14:13,812
அவமானமா இருக்கு.

145
00:14:14,688 --> 00:14:17,232
- நான் மறுபடி கீழே போகலாமா?
- இப்போ பாரு.

146
00:14:17,232 --> 00:14:19,985
நேரா படுக்கைக்குப் போ, பிளீஸ்.
நாள் முழுவதும் விளையாடியாச்சு.

147
00:14:19,985 --> 00:14:21,904
ஆனால் எனக்குக் களைப்பா இல்லையே.

148
00:14:21,904 --> 00:14:23,780
நீ நல்லா தூங்கிப் போயிட்ட.

149
00:14:23,780 --> 00:14:25,616
ஆனால் இப்போ இன்னும் கிறிஸ்துமஸ் இருக்கே.

150
00:14:25,616 --> 00:14:28,994
கொஞ்சம் குடிக்க அவனுக்கு நீர் தர முடியுமா, அன்பே?
அப்புறம் ஒரு படுக்கும் பொம்மையும்.

151
00:14:36,376 --> 00:14:39,713
விவேகமானக் குதிரையே, "உண்மை"
அப்படின்னா என்ன பொருள்?

152
00:14:40,214 --> 00:14:42,674
உங்கிட்ட அசையும் பாகங்கள் இருக்கணுமா, இல்ல...

153
00:14:42,674 --> 00:14:45,135
அவங்க சொல்றதை எல்லாம் கேட்காதே, முயல்குட்டியே.

154
00:14:45,135 --> 00:14:48,305
உண்மையா இருப்பதுன்னா, நீ எப்படி
இணைக்கப்பட்டிருக்க என்பதெல்லாம் இல்ல.

155
00:14:48,305 --> 00:14:50,390
அது உனக்கு நடக்கும் ஒரு விஷயம்.

156
00:14:51,016 --> 00:14:55,145
ஒரு குழந்தை உன்னை நெடுநாளா நேசிச்சா,

157
00:14:55,145 --> 00:14:56,688
வெறுமனே விளையாட்டுக்கு மட்டும் இல்ல

158
00:14:56,688 --> 00:15:01,944
ஆனால் உண்மையா உன்னை நேசித்தால்,
அப்போ நீ உண்மையா ஆகிடுவ.

159
00:15:02,611 --> 00:15:04,863
அது மாய உலக மேஜிக்கின் ஒரு பகுதி.

160
00:15:06,031 --> 00:15:07,366
அது வலிக்குமா?

161
00:15:08,700 --> 00:15:11,954
கொஞ்சம் வலிக்கும்னுதான் நினைக்கிறேன்
ஏன்னா மிரப் பிரியமான பொம்மைகளைப்

162
00:15:11,954 --> 00:15:15,082
பார்த்தால், அவை நிறைய சாகசஸங்கள்ல
பங்கு எடுத்துப்பதால, கொஞ்சம் பழசாகும்.

163
00:15:15,999 --> 00:15:19,503
ஆனால் என்னை நம்பு,
அதெல்லாம் ஒரு பொருட்டில்லை.

164
00:15:20,128 --> 00:15:24,883
குழந்தைகள் நம்மை நேசிக்கும்போது,
அவர்கள் முழு மனதுடன் அதைச் செய்கிறார்கள்.

165
00:15:26,635 --> 00:15:30,597
அதைவிட இன்னும் ஒரு அழகான
உணர்வு இருந்தால், எனக்குத் தெரியாது.

166
00:15:33,475 --> 00:15:36,979
என்றாவது ஒரு நாள் நானும்
உண்மையாகணும்னு விரும்புறேன்.

167
00:15:36,979 --> 00:15:40,774
சரி, அந்தச் சிறுவன் உன்னை நேசித்தால்,
அப்போ அது நடக்கும்.

168
00:15:43,068 --> 00:15:43,902
யாரோ வராங்க.

169
00:15:43,902 --> 00:15:45,696
- ஜாக்கிரதை!
- ஜாக்கிரதை!

170
00:15:45,696 --> 00:15:46,989
நேரம் வந்துடுச்சு!

171
00:15:48,156 --> 00:15:49,324
உனக்குத் தெரியவே தெரியாது.

172
00:15:49,324 --> 00:15:52,077
- நகரு. நகரு.
- அவள் என்னைத் தள்ளுறா.

173
00:15:52,077 --> 00:15:53,579
எனக்குக் கொஞ்சம் இடம் விடு.

174
00:15:54,872 --> 00:15:55,914
எந்த பொம்மை?

175
00:15:55,914 --> 00:15:57,291
என் முயல்குட்டி!

176
00:15:59,168 --> 00:16:00,335
பெர்ஃபெக்ட்.

177
00:16:08,093 --> 00:16:09,344
இனிய கனவுகள்.

178
00:16:10,387 --> 00:16:11,388
நைட் நைட்.

179
00:16:21,565 --> 00:16:22,983
ஹலோ, முயல்குட்டி.

180
00:16:22,983 --> 00:16:24,902
உனக்கு என்னுடன் விளையாட விருப்பமா?

181
00:16:27,070 --> 00:16:29,907
சிறப்பு. சுரங்கம் தோண்டுவதுல நல்ல
திறமைசாலிதான் எனக்குத் தேவை.

182
00:16:29,907 --> 00:16:34,369
அதுவும் நீ முயல்குட்டியா இருப்பதால, நீதான்
அதுக்கு சரியான நபர்னு நான் புரிஞ்சுகிட்டேன்.

183
00:16:35,579 --> 00:16:37,456
நாம எதுக்காக இப்போ காத்துட்டு இருக்கோம்?

184
00:16:45,714 --> 00:16:46,715
அடடே.

185
00:16:47,216 --> 00:16:50,427
முயல்குட்டி,
நான் பார்த்ததுல, நீதான் சிறப்பா தோண்டுற.

186
00:16:50,427 --> 00:16:53,722
நாம ஏற்கனவே தரைக்குக் கீழே
மில்லியன் மைல்கள் போயிருப்போம்.

187
00:16:53,722 --> 00:16:55,599
நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.

188
00:16:55,599 --> 00:16:59,019
இந்த இடத்துல பூம் காய்ந்து இருக்கு,
அதனால, அந்த சுரங்கம் எந்த நிமிடமும் விழலாம்.

189
00:16:59,520 --> 00:17:01,939
முயல்களான எங்களுக்கு இது போன்ற
விஷயங்களைப் பத்தித் தெரியும்.

190
00:17:03,815 --> 00:17:08,194
என் கணக்குப் பிரகாரம், நாம பாதி வழி வந்துட்டோம்.

191
00:17:09,363 --> 00:17:10,489
நாம எங்கே போறோம்?

192
00:17:10,489 --> 00:17:12,115
நாம சிஸ்ஸிப் போறோம் இல்ல.

193
00:17:12,115 --> 00:17:14,034
அதுதான் ஒரு காலத்துல நான் வசித்த இடம்.

194
00:17:14,034 --> 00:17:15,618
என் நண்பர்கள் அனைவரும் அங்கே இல்லைா.

195
00:17:17,954 --> 00:17:19,957
எனக்கு இங்கே நண்பர்களே இல்ல.

196
00:17:22,291 --> 00:17:23,417
நான் இருக்கேனே.

197
00:17:25,170 --> 00:17:26,380
நீ சொல்வது சரிதான்.

198
00:17:26,380 --> 00:17:30,467
நீதான் என் புதிய நண்பன், அதனால
நீதான் என் உற்ற தோழனும் ஆகிறாய்.

199
00:17:32,219 --> 00:17:36,306
கடவுளே, நான் யாருக்கும் இதுக்கு முன்னாடி
உற்ற தோழனா இருந்ததே இல்ல.

200
00:17:41,979 --> 00:17:45,816
நாம எவ்வளவு வேகமா தோண்டுறோம் பார்.
நாம் சீக்கிரமே அங்கே இருப்போம்.

201
00:17:48,443 --> 00:17:49,528
நான் எதையோ அடிச்சேன்.

202
00:17:58,370 --> 00:18:01,123
ஒரு புதையல் வரைப்படம்!

203
00:18:02,416 --> 00:18:03,417
அடடே.

204
00:18:04,793 --> 00:18:05,794
அது என்னது?

205
00:18:06,545 --> 00:18:07,921
சுரங்கம்!

206
00:18:07,921 --> 00:18:09,006
அது கீழே சரிந்து விழுது.

207
00:18:09,798 --> 00:18:12,384
சீக்கிரம், முயல்குட்டியே,
நாம இங்கிருந்து வெளியேறணும்.

208
00:18:12,384 --> 00:18:13,760
என் கையைப் பிடிச்சுக்கோ.

209
00:18:16,847 --> 00:18:20,309
- நாம தப்பிக்க முடியாது!
- நாம தப்பிப்போம். கிட்டத்தட்ட வந்தாச்சு.

210
00:18:22,102 --> 00:18:23,270
நாம
தப்பிச்சுட்டோம், முயல்குட்டி.

211
00:18:24,104 --> 00:18:25,189
நாம பாதுகாப்பா இருக்கோம்.

212
00:18:29,193 --> 00:18:30,861
நாமதான் இப்போது உற்ற நண்பர்கள்,

213
00:18:30,861 --> 00:18:35,699
நாம சேர்ந்தே அந்த புதையலை இனி
சேர்ந்தே தேடுவேன்.

214
00:18:52,508 --> 00:18:55,886
வகுப்பே, நீங்கள் சந்திக்க வேண்டிய
நபர் ஒருவரை அறிமுகப்படுத்துறேன்.

215
00:18:58,013 --> 00:19:01,975
வில்லியம், நீங்க இங்கே வரலாமா, பிளீஸ்?

216
00:19:03,477 --> 00:19:04,478
பாருங்க.

217
00:19:16,823 --> 00:19:19,117
வகுப்பே, வில்லியமுக்கு எல்லோரும்
ஹலோன்னு சொல்லுங்க.

218
00:19:19,117 --> 00:19:21,411
ஹலோ, வில்லியம்...

219
00:19:22,079 --> 00:19:26,291
வில்லியம், நீ உன்னைப் பத்தி
ஒரு சில விஷயங்களை சொல்ல விரும்புறயா?

220
00:19:36,593 --> 00:19:39,096
அது பரவாயில்ல, வில்லியம்.
நீ இப்போது கீழே உட்காரலாம்.

221
00:19:41,598 --> 00:19:44,685
அதனால, கடந்த வாரம் நாம் இலையுதிர்
காலம் பற்றி பேசினோம்.

222
00:19:44,685 --> 00:19:47,563
யாருக்காவது ஞாபகம் இருக்கா
ஆட்டமில் என்ன நடக்கும்?

223
00:19:52,234 --> 00:19:53,527
ஹலோ.

224
00:19:53,527 --> 00:19:55,654
நீதானே பக்கத்து வீட்டு குடி
வந்திருக்கிற அந்தப் பையன்?

225
00:19:56,989 --> 00:19:58,657
எங்களுடன் வந்து விளையாட விரும்புறயா?

226
00:20:01,493 --> 00:20:03,328
அவனை விடு, லூசி. வந்து விளையாடு.

227
00:20:11,879 --> 00:20:14,923
சீக்கிரம்! நாம தூக்குப்பாலம் கீழ இருக்கும்போதே
கோட்டைக்குள் போய் தாக்குவோம்.

228
00:20:14,923 --> 00:20:16,925
பொக்கிஷம் அந்த அரியாசன அறையில்
இருக்குன்னு நினைக்கிறேன்.

229
00:20:16,925 --> 00:20:19,219
வில்லியம் மதிய உணவு ரெடி.

230
00:20:24,099 --> 00:20:25,392
இன்னும் லெட்டூஸ் வேணுமா?

231
00:20:25,392 --> 00:20:26,810
எனக்கு வயறு ரொம்பிடுச்சு.

232
00:20:26,810 --> 00:20:33,609
ஆனால் நான் எவ்வளவு சாப்பிட்டாலும் சரி, மோமோ என்னை
இன்னும் ரெண்டு விள்ளு சாப்பிடச் சொல்வார்.

233
00:20:33,609 --> 00:20:37,362
பாரு, அந்த பொக்கிஷத்தைக்
கண்டுப்பிடிக்க ஒரு திட்டம் வச்சிருக்கேன்.

234
00:20:38,238 --> 00:20:39,615
நமக்கு கொஞ்சம் மேஜிக் தேவை.

235
00:20:40,115 --> 00:20:42,492
ஃபேரீக்கள் எல்லாம் அங்கே இருக்காங்கன்னு
ஜார்ஜ் சொல்கிறான்.

236
00:20:42,492 --> 00:20:46,121
நீ ஒரு ஃபேரீயை சந்திக்க விரும்பினா, நீ குட்டியா
ஒரு வீட்டை அவங்களுக்குக் கட்டணுமாம்.

237
00:20:47,247 --> 00:20:48,248
மோமோ.

238
00:20:48,749 --> 00:20:51,210
முயல்குட்டியும் நானும் சாப்பிட்டு முடிச்சுட்டோம்.
நாங்க போய் விளையாடலாமா?

239
00:20:51,210 --> 00:20:52,920
இன்னும் ரெண்டு வாய் சாப்பிடு.

240
00:20:56,632 --> 00:20:57,883
முழுவதுமா ரெண்டு வாய்.

241
00:21:12,272 --> 00:21:15,359
எனவே, இதுதான் அதிகாரப்பூர்வமான
ஒரு ஃபேரீ வீடு.

242
00:21:15,359 --> 00:21:18,570
இப்போ நாம செய்ய வேண்டியதெல்லாம்
ஒரு ஃபேரீ அருள்வாக்கு சொல்லுவதுதான்.

243
00:21:21,406 --> 00:21:24,660
ஃபேரீக்கள் சிறகடிச்சு, மினுமினுத்துப் பறக்கும்.

244
00:21:25,577 --> 00:21:29,164
இந்தத் தோட்டத்திற்கு வாருங்கள்,
மேலே வானம்.

245
00:21:29,164 --> 00:21:34,253
பயமில்லா வில்லியம் மற்றும் முயல்குட்டி சொல்றாங்க,
"ஆலக்கசாம் ஆலக்கசூ!

246
00:21:34,253 --> 00:21:37,548
எங்களுக்கு உங்க மந்திர சக்தித் தேவை,
ஆகவே இங்கே வாருங்கள் உடனே!

247
00:21:39,091 --> 00:21:41,468
இப்போ, நாம கொஞ்சமும்
எதிர்ப்பார்க்காதபோது,

248
00:21:41,468 --> 00:21:45,097
ஒரு மேஜிக் ஃபேரீ தோன்றி, நாம
பொக்கிஷத்தை கண்டுப்பிடிக்க உதவுவார்.

249
00:21:51,186 --> 00:21:52,354
நைட் நைட் மோமோ.

250
00:21:53,897 --> 00:21:57,401
கடவுளே, அந்த முயல்குட்டியைப் பார்.
நான் அதை எடுத்துட்டுப் போய் தைச்சுத் தரேன்.

251
00:21:57,401 --> 00:21:59,736
வேண்டாம்! நீ செய்ய வேண்டாம், மோமோ.

252
00:21:59,736 --> 00:22:01,071
நீங்க முயல்குட்டியை கொண்டுப் போகமுடியாது.

253
00:22:01,071 --> 00:22:02,447
சரிதான், சரிதான்.

254
00:22:02,447 --> 00:22:03,949
கடவுளே.

255
00:22:03,949 --> 00:22:06,201
நான் அதைக் கொஞ்சம் சரிசெய்யலாம்னு நினைச்சேன்.

256
00:22:06,201 --> 00:22:07,828
ஒரு பொம்மைக்குப் போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா.

257
00:22:07,828 --> 00:22:10,372
அவன் பொம்மையில்ல, மோமோ.
அவன் ஒரு நிஜம்.

258
00:22:10,372 --> 00:22:13,000
சரி, நீ சொன்னால் சரி.

259
00:22:14,418 --> 00:22:15,502
குட் நைட்.

260
00:22:30,809 --> 00:22:32,186
அந்தச் சிறுவனா?

261
00:22:32,186 --> 00:22:33,437
ஆம்.

262
00:22:33,437 --> 00:22:35,814
உன்னை உண்மைன்னு சொன்னானா?

263
00:22:36,440 --> 00:22:37,774
ஆம்.

264
00:22:37,774 --> 00:22:39,985
- நீயா?
- ஆமாம்.

265
00:22:39,985 --> 00:22:42,571
உனக்கு வித்தியாசமா எதுவும் தெரியுதா?

266
00:22:42,571 --> 00:22:44,239
எனக்குத் தெரியல.

267
00:22:44,239 --> 00:22:46,074
அப்படியெல்லாம் இல்ல.

268
00:22:46,074 --> 00:22:50,162
நீ முன்னாடி இருந்தது போலதான் இருக்க.
நீ ஒரு பொம்மை மாதிரிதான் இருக்க.

269
00:22:50,162 --> 00:22:53,790
நீங்க அனைவருமே பொம்மைகள்தான்,
ஆனால் நீங்க உண்மைன்னு சொல்றீங்க.

270
00:22:53,790 --> 00:22:56,043
ஆம், ஆனால் நாங்கள் சொல்வதில்
பொருளே கிடையாது.

271
00:22:56,043 --> 00:22:58,212
நாங்க வெறுமனே பாசாங்குதான் செய்யறோம்.

272
00:22:58,212 --> 00:23:03,800
அதோட நாங்க எப்படி இருக்கனுமோ,
அப்படியேதான் பிரதிபலிக்கிறோம்.

273
00:23:04,301 --> 00:23:05,928
சிங்கத்திற்கு பிடரி மயிர் உள்ளது.

274
00:23:05,928 --> 00:23:08,138
- ராஜாவுக்குதான் மகுடம் உள்ளது.
- ஓ, சரி, ஆம்.

275
00:23:08,138 --> 00:23:09,348
உன்னைப் பாரு.

276
00:23:09,348 --> 00:23:11,475
நீ அழுக்கா இருக்க.

277
00:23:12,142 --> 00:23:14,311
- நீ கிழிஞ்சு போயிருக்க.
- ஆம், ஆம், ஆம்.

278
00:23:14,311 --> 00:23:19,525
இதைச் சொல்ல கசப்பா இருக்கு, ஆனால் என்னால உனக்கு
அடைக்கப்பட்டிருக்கும் பஞ்சை பார்க்க முடியுது.

279
00:23:19,525 --> 00:23:23,779
அவனுக்குள்ள அடைச்சிருப்பது
கடவுளே! உனக்குள்ள எதை வச்சு ரொப்பியிருக்காங்க?

280
00:23:24,988 --> 00:23:30,202
என்னுடைய வயசுல, எந்த பொம்மைக்கு
விதிமுறைகள் இல்லாம இருக்கும்?

281
00:23:30,202 --> 00:23:35,040
நீ இவ்வளவு குழப்பத்தை வச்சுகிட்டு
எப்படி உண்மையா இருக்க முடியும்?

282
00:23:35,040 --> 00:23:36,291
போதும்.

283
00:23:36,291 --> 00:23:39,628
உங்கள்ல யாருக்கு உண்மையா
இருப்பதன் அர்த்தம் தெரியும்?

284
00:23:39,628 --> 00:23:41,547
சிறுவனுக்குத்தான் தெரியும்,

285
00:23:41,547 --> 00:23:46,051
மேலும் அவன் முயல்குட்டி நிஜம் என்றால்,
அவன் நிஜம்தான்.

286
00:23:46,969 --> 00:23:48,136
யாரோ வராங்க.

287
00:23:49,930 --> 00:23:52,850
முயல்குட்டி, அந்த ஃபேரீ மந்திரம்
வேலை செய்யலன்னு தெரியும்,

288
00:23:52,850 --> 00:23:55,060
ஆனால் நம்மால இனியும் காத்திருக்க நேரமில்லை.

289
00:23:55,936 --> 00:23:58,939
நாம அந்த பொக்கிஷத்தை, மத்தவங்களுக்கு
முன்னாடி கண்டுப்பிடிக்கணும்.

290
00:24:00,482 --> 00:24:03,110
அது அந்த அற்புதமான காடுகளில்
இருக்குன்னு நினைக்கிறேன்.

291
00:24:37,895 --> 00:24:39,605
அது அசைவதைப் பார்த்தேன், முயல்குட்டி.

292
00:24:39,605 --> 00:24:41,899
சத்தியமா பார்த்தேன்.

293
00:24:52,659 --> 00:24:53,660
இல்ல!

294
00:24:54,161 --> 00:24:56,496
அது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லைன்னு
நான் நினைக்கிறேன், இல்லையா?

295
00:24:56,496 --> 00:24:58,290
அது என்ன முயல்குட்டி?

296
00:24:58,290 --> 00:25:00,459
ஆனால் அவன் எப்போதும் தனியா இருக்கான்.

297
00:25:01,251 --> 00:25:03,086
அது அவனுக்கு நல்லதில்லையே.

298
00:25:03,086 --> 00:25:04,588
அதை நான் மட்டும் சொல்லலை.

299
00:25:04,588 --> 00:25:06,632
அவனுடைய ஆசிரியர்களும் அதை கவனிச்சிருக்காங்க.

300
00:25:07,216 --> 00:25:09,259
நட்பு செய்துகொள்ள நேரம் ஆகும்.

301
00:25:09,259 --> 00:25:10,761
பல மாதங்கள் ஆயிடுச்சு.

302
00:25:10,761 --> 00:25:12,846
இன்னும் எவ்வளவு காலம் அப்படியே விடுவது?

303
00:25:13,722 --> 00:25:15,891
அவனுடைய முயல்குட்டியுடன்
சந்தோஷமாத்தான் இருக்கான்னு தோணுது.

304
00:25:15,891 --> 00:25:18,477
அவனுக்கு உண்மையான
நண்பர்கள்னு யாரும் இல்லை.

305
00:25:35,160 --> 00:25:38,121
நாம் எந்த வகையான பொக்கிஷத்தைத் தேடுகிறோம்?

306
00:25:38,121 --> 00:25:39,456
அது தங்கமா?

307
00:25:39,456 --> 00:25:40,749
நகைகளா?

308
00:25:41,291 --> 00:25:42,835
இல்ல சாக்லேட் பார்களா?

309
00:25:43,627 --> 00:25:46,630
இல்ல, அதெல்லாம் எதுவும் இல்லன்னு நினைக்கிறேன்.

310
00:25:47,214 --> 00:25:50,926
அது என்னன்னு எனக்குத் தெரியல, ஆனால் நாம
அதைப் பார்த்தால் தெரியும்னு நினைக்கிறேன்.

311
00:25:53,262 --> 00:25:54,680
நாம சத்தம்
செய்யாம இருக்கணும்.

312
00:25:54,680 --> 00:25:58,141
காட்டில் ஆபத்தான விலங்குகள் நிறைந்திருக்கும்.

313
00:25:58,684 --> 00:26:01,645
முயல்களான நாங்கள் பேச்சில்லாமல் தொடர்புகொள்கிறோம்.

314
00:26:01,645 --> 00:26:06,900
எடுத்துக்காட்டாக, நாங்க ஆபத்து வருதுன்னு
சொல்ல, காலை இப்படித் தட்டுவோம்.

315
00:26:13,031 --> 00:26:14,199
நாங்க இப்படியும் செய்வோம்.

316
00:26:16,535 --> 00:26:17,953
அதுக்கு என்ன அர்த்தம்?

317
00:26:17,953 --> 00:26:22,457
சரி, ஹலோ மற்றும் குட்பை, ரெண்டுக்கும்
அதைத்தான் உபயோகிக்கிறோம்.

318
00:26:23,333 --> 00:26:25,252
ஹலோவுக்கும் குட்பைக்கும் ஒரே சைகையா?

319
00:26:25,252 --> 00:26:30,090
சரி, ஏன்னா ஒரு விஷயத்துக்கு குட்பை சொல்லும்போது,
இன்னொரு விஷயத்துக்கு ஹலோ சொல்வாய்.

320
00:26:30,757 --> 00:26:33,969
ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய ஆரம்பம்தான்.

321
00:26:38,182 --> 00:26:41,935
நீ ஏற்கனவே அதைச் செய்துட்ட.
ஏதோ ஆபத்துன்னு அதுக்கு அர்த்தம்...

322
00:26:42,436 --> 00:26:43,562
ஓடு!

323
00:26:50,444 --> 00:26:53,155
என்னை விட்டுட்டுப் போ. உன்னை காப்பாத்திக்கோ.

324
00:26:53,155 --> 00:26:54,239
முடியவே முடியாது!

325
00:27:00,204 --> 00:27:02,247
அடடா, இல்ல. நாம மாட்டிக்கிட்டோம்.

326
00:27:06,919 --> 00:27:07,836
பொறு.

327
00:27:14,259 --> 00:27:16,261
அதி அற்புதமான செயல்.

328
00:27:16,261 --> 00:27:18,514
நீ அதைச் செய்துட்டன்னு என்னால நம்பவே முடியலை.

329
00:27:18,514 --> 00:27:21,517
- ஆம்! நாம சாதிச்சுட்டோம், முயல்குட்டி.
- நீ சாதிச்சுட்ட.

330
00:27:24,520 --> 00:27:25,729
உனக்கு ஒண்ணும் ஆகலயே?

331
00:27:25,729 --> 00:27:26,813
நான் நல்லாயிருக்கேன்.

332
00:27:37,115 --> 00:27:38,367
வில்லியம்!

333
00:27:40,702 --> 00:27:42,079
நீ நலமா இருக்கியா?

334
00:27:52,923 --> 00:27:54,091
வந்து பாரு.

335
00:27:56,134 --> 00:27:59,596
- யார் நீ?
- நீ என்ன பொருள்?

336
00:27:59,596 --> 00:28:01,723
நான் ஒரு முயல்குட்டி. உங்களைப் போல.

337
00:28:02,933 --> 00:28:06,395
சரி, நீ முயல் மாதிரி இல்லை.
நீ ஒரு பொம்மை மாதிரி இருக்க.

338
00:28:07,729 --> 00:28:11,316
நான் ஒரு பொம்மை முயல்குட்டியாக இருந்தேன்,
ஆனால் இப்போ, நிஜமாக மாறிட்டேன்.

339
00:28:12,776 --> 00:28:15,279
ஒரு குழந்தை உன்னை நேசிக்கும்போது,
நீ உண்மையா மாறிடுவ.

340
00:28:15,988 --> 00:28:18,824
அப்படித்தான் இந்த மாய உலக மேஜிக்
இயங்குகிறது.

341
00:28:20,784 --> 00:28:22,578
சரி, நீ இயங்க முடியுமா?

342
00:28:22,578 --> 00:28:25,539
வந்து,
உண்மையில முடியாது.

343
00:28:26,623 --> 00:28:27,791
நீ தாவ முடியுமா?

344
00:28:29,459 --> 00:28:32,045
அதுக்கு சரியான கால்கள் இல்ல.

345
00:28:32,754 --> 00:28:36,091
உன்னால தாவ முடியாமப் போனால், நீ
எப்படி உண்மையான முயலா இருக்க முடியும்?

346
00:28:37,509 --> 00:28:38,927
எனக்குத் தெரியல.

347
00:28:39,428 --> 00:28:42,890
ஒரு குழந்தை உன்னை நேசிக்கும்போது நீ
உண்மையாக மாறுகிறாய் என்றாயே.

348
00:28:42,890 --> 00:28:47,102
சரி, உன்னுடைய இந்த குழந்தை உன்னை நிஜமாகவே
நேசிக்கிறானான்னு உனக்கு எப்படித் தெரியும்?

349
00:28:48,228 --> 00:28:49,563
அது உன்னிடம் அப்படி சொல்லியதா?

350
00:28:50,606 --> 00:28:52,691
இல்லை, அவன் நான் நிஜம் என சொன்னான்.

351
00:28:54,318 --> 00:28:55,319
ஆனால் நான் நினைத்தேன்...

352
00:28:55,319 --> 00:28:59,072
ஆனால் அவன் உன்னை நேசித்தால்,
உன்னை அவன் ஏன் இங்கே விட்டுட்டுப் போகணும்?

353
00:28:59,072 --> 00:29:00,699
இந்த குளிர்ல.

354
00:29:03,076 --> 00:29:04,077
பாருப்பா.

355
00:29:04,077 --> 00:29:05,495
சீக்கிரமே இருட்டாகிடும்.

356
00:29:06,038 --> 00:29:09,082
- நாம நம்ம பொந்துக்குப் போகணும்.
- நல்வாழ்த்துகள்.

357
00:29:09,082 --> 00:29:10,918
உனக்கு நல்வாழ்த்துகள், முயல் பொம்மையே.

358
00:29:11,418 --> 00:29:12,794
பாவம்.

359
00:29:35,442 --> 00:29:37,152
நீ அங்கே என்ன செய்துட்டு இருக்க?

360
00:29:38,612 --> 00:29:41,156
வாப்பா. உனக்குச் சொந்தமான
இடத்துக்குப் போகலாம் வா.

361
00:29:48,497 --> 00:29:50,207
முயல்குட்டி, நீ எங்கே போயிட்ட?

362
00:29:52,000 --> 00:29:53,669
அந்தச் சிறுவன் என்னை வெளியே விட்டுட்டான்.

363
00:29:54,795 --> 00:29:59,424
நிஜமான முயல்கள் வந்து, நான் இன்னும்
ஒரு பொம்மைதான்னு சொன்னாங்க.

364
00:30:00,884 --> 00:30:02,386
அவங்க சொன்னது சரியாத்தான்
இருக்கும்னு எனக்கும் தோணுது.

365
00:30:03,762 --> 00:30:10,185
ஒருவேளை அந்த சிறுவன் என்னை நேசிக்கலையோ,
அதனாலதான் நான் நிஜமா மாறலயோ.

366
00:30:11,645 --> 00:30:14,523
அந்தச் சிறுவனுக்கு உடல்நிலை ரொம்ப
மோசமா இருக்கு, முயல்குட்டி.

367
00:30:14,523 --> 00:30:17,150
என்ன? எப்படிச் சொல்ற?

368
00:30:17,150 --> 00:30:19,862
அவன் கடும் ஜுரத்துடன் படுத்திருக்கான்.

369
00:30:20,362 --> 00:30:23,866
நாங்க அந்தச் சிறுவனின் தாயாரிடம் டாக்டர்
சொல்வதை நேத்திக்கு இரவு கேட்டோம்.

370
00:30:23,866 --> 00:30:26,660
ஆனால் அந்தச் சிறுவன் நல்லா ஆயிடுவான், இல்லையா?

371
00:30:26,660 --> 00:30:28,203
அவன் நல்லாயிடுவான்.

372
00:30:28,203 --> 00:30:32,249
அவனுடைய பெரியப்பாவிற்கு சில
வருடங்களுக்கு முன் இதேதான் வந்ததாம்.

373
00:30:32,249 --> 00:30:34,293
அவர் கிட்டத்தட்ட இதுலே உயிர் இழந்தார்.

374
00:30:35,210 --> 00:30:36,503
பெரும்பாலும் பிழைப்பதில்லை.

375
00:30:37,963 --> 00:30:39,840
இன்னொரு விஷயம், முயல்குட்டியே.

376
00:30:41,008 --> 00:30:42,759
அவனுடைய பெரியப்பாவிற்கு நோய் வந்தபோது,

377
00:30:42,759 --> 00:30:47,264
அப்போது அவர் தொட்ட அனைத்து
பொருட்களையும் எரித்து களைந்தன்ர்.

378
00:30:47,264 --> 00:30:49,224
டாக்டர்களின் ஆணையினால்.

379
00:30:49,224 --> 00:30:52,227
மத்தவங்களுக்கும் அந்த நோய் பரவாமத்
தடுக்க அவங்க செய்யும் உத்தி.

380
00:30:52,728 --> 00:30:57,024
எனவே, அவங்க இன்னிக்கு ராத்திரி ஒரு பொம்மையை
எடுக்க வரும்போது நீ மறைஞ்சுக்கணும்.

381
00:30:57,024 --> 00:31:01,528
ஏன்னா நீ மறைஞ்சுக்காம இருந்து, அவங்க உன்னை
எடுத்துட்டா, அதுதான் உன் முடிவு.

382
00:31:02,154 --> 00:31:03,572
உனக்குப் புரியுதா?

383
00:31:07,659 --> 00:31:09,661
பாரு. அந்த டாக்டர்.

384
00:31:11,288 --> 00:31:12,956
- வந்ததுக்கு நன்றி.
- நிச்சயமா.

385
00:31:26,845 --> 00:31:29,056
நான் உங்கிட்ட உண்மையைச்
சொல்றேன். அவன்...

386
00:31:31,016 --> 00:31:32,184
அவன் உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு.

387
00:31:33,644 --> 00:31:35,145
அவனுக்குச் சரியாகுமா?

388
00:31:36,813 --> 00:31:39,441
மன்னிக்கணும். அது உறுதியாச் சொல்ல முடியாது.

389
00:31:40,442 --> 00:31:42,528
இன்னிக்கு இரவு ரொம்ப சிரமப்படும்.

390
00:31:42,528 --> 00:31:44,446
நீங்கதான் அவனுக்கு தைரியமா இருக்கணும்.

391
00:31:46,907 --> 00:31:47,908
நான்...

392
00:31:50,827 --> 00:31:53,038
நான் போய், படுத்துக்க அவனுக்கு
ஒரு பொம்மையைக் கொண்டு வரேன்.

393
00:32:08,262 --> 00:32:10,055
அவங்க வராங்க. மறைஞ்சுக்கோ.

394
00:32:10,055 --> 00:32:11,306
இங்கிருந்து வெளியே போ.

395
00:32:11,306 --> 00:32:12,599
அவங்க வராங்க.

396
00:32:13,475 --> 00:32:16,186
முயல்குட்டி, நீ நகர்ந்து போகணும்.

397
00:32:16,186 --> 00:32:20,315
இப்போ உன்னை அந்த அறைக்குள்ள எடுத்துட்டுப்
போனா, உன்னை நெருப்புல போடுவாங்க.

398
00:32:20,315 --> 00:32:25,362
நாங்க அவ்வளவு சாகஸங்களை சேர்ந்து செய்தபோதும்,
அவன் ஒரு முறைகூட என்னை விட்டுட்டுப் போனதில்லை.

399
00:32:26,572 --> 00:32:28,907
எனவே, நான் அவனை விட்டுப் போக மாட்டேன்.

400
00:32:28,907 --> 00:32:32,619
முயல்குட்டி, பிளீஸ், சொன்னா புரிஞ்சுக்கோ.

401
00:32:32,619 --> 00:32:34,621
அதுதான் உன் முடிவுன்னு ஆயிடும்.

402
00:32:35,372 --> 00:32:38,667
அதாவது, நீதானே சொன்ன அந்தச் சிறுவன்
உன்னை வெளியே விட்டுட்டு வந்துட்டானே.

403
00:32:39,501 --> 00:32:42,045
ஒருவேளை அவன் உன்னை நேசிக்கலையோ.

404
00:32:44,673 --> 00:32:49,928
அது உண்மையா இருக்கலாம்,
ஆனால் நான் அவனை நேசிக்கிறேன்.

405
00:33:16,121 --> 00:33:17,915
இதோ உன்னுடைய ஃபேவரெட், என் அன்பே.

406
00:33:32,471 --> 00:33:34,306
நீதானா அது, முயல்குட்டியே?

407
00:33:35,766 --> 00:33:36,975
நான்தான்.

408
00:33:41,939 --> 00:33:43,148
எனக்கு பயமா இருக்கு.

409
00:33:44,107 --> 00:33:45,317
எனக்குத் தெரியும்.

410
00:33:45,943 --> 00:33:47,152
எனக்கும்தான்.

411
00:33:48,403 --> 00:33:50,322
எனக்கு இன்னும் தைரியம் இருந்தால்
நல்லாயிருக்கும்.

412
00:33:50,322 --> 00:33:52,491
நான் எப்போதும் அதை விரும்பியுள்ளேன்.

413
00:33:52,491 --> 00:33:54,576
நீ எப்படி அதிக தைரியசாலியா இருக்க முடியும்?

414
00:33:54,576 --> 00:33:59,581
நாம சேர்ந்து செய்த சாகஸங்கள் எல்லாத்திலும்,
நீதானே எப்போதும் காப்பாத்துவ.

415
00:33:59,581 --> 00:34:01,375
நீ என்னை விட்டுட்டுப் போனதே இல்லையே.

416
00:34:02,334 --> 00:34:04,670
நீ வித்தியாசமா இருக்க விரும்பக் கூடாது.

417
00:34:04,670 --> 00:34:07,172
நீ எப்படி இருக்கியோ அதுதான் பெர்பெக்ட்,
நல்லாயிருக்கு.

418
00:34:08,130 --> 00:34:10,384
நீங்க நிஜமாவே நான் ரொம்ப வீரன்னு நினைச்சியா?

419
00:34:11,009 --> 00:34:13,136
முற்றிலும் ரொம்ப தைரியசாலி.

420
00:34:18,225 --> 00:34:22,603
எனக்குத் தேவலையானபின், நாம் கடற்கரைக்குப்
போகலாம் என பெற்றோர்கள் சொன்னார்கள்.

421
00:34:22,603 --> 00:34:24,731
அது நல்லாயிருக்கும் இல்ல?

422
00:34:24,731 --> 00:34:27,025
ஒருவேளை நம்ம பொக்கிஷம் அங்கே
கிடைக்குமோ என்னவே...

423
00:34:28,025 --> 00:34:30,279
ஒருவேளை அது வெறுமனே மணல்ல
புதைஞ்சு கிடக்கலாம்.

424
00:34:31,071 --> 00:34:32,989
நாம பொக்கிஷத்தைக் கண்டுப்பிடிக்க வேண்டாம்.

425
00:34:33,782 --> 00:34:35,701
எனக்கு ஏற்கனவே பொக்கிஷம் கிடைச்சிடுச்சு.

426
00:34:36,994 --> 00:34:38,661
நான் உன்னை நேசிக்கிறேன், முயல்குட்டி.

427
00:34:40,038 --> 00:34:41,456
நானும் உன்னைநேசிக்கிறேன்.

428
00:34:59,391 --> 00:35:02,895
வீட்டில உள்ள எல்லா ஜன்னல்களையும் திறங்க.
இங்கே உள்ள கொஞ்சம் ஃபிரெஷ் காத்து வரட்டும்.

429
00:35:02,895 --> 00:35:05,564
அவனுக்கு, இன்னிக்கு மதியம் கொஞ்சம்
சூப் செய்து தரலாம்னு நினைச்சேன், டாக்டர்.

430
00:35:05,564 --> 00:35:07,733
- அது பரவாயில்லயா?
- அது ரொம்ப நல்லது.

431
00:35:09,776 --> 00:35:13,447
இப்போ, அந்த தொற்று இருந்தபோது வில்லியமுக்குப்
பக்கத்துல இருந்ததை எரிக்கணும்.

432
00:35:13,447 --> 00:35:15,157
இந்த தொற்று இன்னும் பரவாம பார்த்துக்கணுமே.

433
00:35:15,157 --> 00:35:18,410
எனவே, ஷீட்டுகள், பைஜாமாக்கள்,
பொம்மைகள், எல்லாத்தையும் எரிக்கணும்.

434
00:35:24,917 --> 00:35:26,752
இன்னிக்கு நீ இங்கே இருப்பது நல்லதாப் போச்சு, ஜார்ஜ்.

435
00:35:26,752 --> 00:35:28,587
அதையெல்லாம் எரிச்சிடு.

436
00:35:30,255 --> 00:35:31,298
நான் அதை இப்பவே செய்யறேன்.

437
00:35:32,257 --> 00:35:33,467
நான் தீக்குச்சி எடுத்துட்டு வரேன்.

438
00:35:34,176 --> 00:35:36,303
வில்லியம் குட்டிக்கு நல்ல குணமாகிட்டு
வருவதைப் பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம்.

439
00:35:37,137 --> 00:35:39,306
அவன் திரும்பவும் எழுந்து சேட்டைச்
செய்ய இன்னும் ஒரு மணிநேரம் கூட ஆகாது.

440
00:35:39,806 --> 00:35:41,433
சரி, அது அப்படித்தானே இருக்கணும்.

441
00:35:41,433 --> 00:35:44,645
- இப்போ, இதுக்கு தீ வைக்கிறேன்.
- நன்றி, ஜார்ஜ்.

442
00:35:44,645 --> 00:35:46,230
இப்போ குளிரடிக்குது, இல்ல?

443
00:35:55,155 --> 00:35:57,282
இல்ல! இல்ல!

444
00:35:57,282 --> 00:35:59,243
வருத்தப்படக் கூடாது, கண்ணா.

445
00:35:59,243 --> 00:36:00,661
எனக்கு வருத்தம் இல்லை!

446
00:36:00,661 --> 00:36:01,954
எங்கே அவன்?

447
00:36:02,829 --> 00:36:04,039
அதுதான், அவனுடைய முயல்குட்டி.

448
00:36:04,039 --> 00:36:05,791
அது எங்கேன்னு கேட்கிறான்.

449
00:36:08,836 --> 00:36:09,837
வில்லியம்.

450
00:36:14,758 --> 00:36:15,759
முயல்குட்டிப் போயிடுச்சு.

451
00:36:16,468 --> 00:36:18,303
நீங்க என்ன சொல்றீங்க? அவன் எங்கே?

452
00:36:18,303 --> 00:36:22,808
அவன் ரொம்ப பழசா, கிழிஞ்சு இருந்தான், அதனால
நாங்க அவனை வெளியே தூக்கிப் போட்டுட்டோம்.

453
00:36:22,808 --> 00:36:24,393
நீங்க ஏன் அப்படி செய்தீங்க?

454
00:36:24,393 --> 00:36:26,270
பாரு, நீ நல்ல பையனா நடந்துகிட்டா,

455
00:36:26,270 --> 00:36:28,605
ஒருவேளை கிறிஸ்துமஸ் தாத்தா, உனக்கு
இன்னொரு புதிய பொம்மையைக் கொண்டு வருவார்.

456
00:36:28,605 --> 00:36:32,985
புதிய பொம்மை வேண்டாம், எனக்கு என் முயல்குட்டிதான்
வேண்டும். எனக்கு முயல்குட்டி வேண்டும்.

457
00:37:03,056 --> 00:37:04,308
இன்னிக்கு என்ன நாள்?

458
00:37:05,142 --> 00:37:07,186
ஓ, அம்மா, அம்மா.

459
00:37:07,978 --> 00:37:09,354
அதுக்குள்ள குளிர்காலம் வந்துட்டுச்சா?

460
00:37:09,354 --> 00:37:11,190
நான் அதிகமா தூங்கிட்டேன் போலஇருக்கு.

461
00:37:13,275 --> 00:37:15,110
நீங்க யாரு?

462
00:37:15,110 --> 00:37:19,948
நான்தான் பிளேரூம் ஃபேரி, மாய உலக
மேஜிக்கின் பொறுப்பு என்கீழேதான் இருக்கு.

463
00:37:20,741 --> 00:37:24,369
இனி தேவைப்படாத பொம்மைகளை
அவை பழசானாலோ, இல்ல கிழிஞ்சுப் போனாலோ

464
00:37:24,953 --> 00:37:26,955
பார்த்துக்கொள்வதுதான் என் வேலை.

465
00:37:28,749 --> 00:37:30,000
நீ ஏன் அழற?

466
00:37:31,835 --> 00:37:36,381
நான் அந்தச் சிறுவனை மிஸ் பண்றதால
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

467
00:37:36,924 --> 00:37:39,343
ஏன்னா நான் அவனுடன் இனி விளையாட முடியாது.

468
00:37:41,011 --> 00:37:45,057
அவன் என்னை நேசிச்சா, நான் உண்மையா ஆகிடுவேன்னு
நினைச்சதால, எனக்குக் கஷ்டமா இருக்கு.

469
00:37:47,768 --> 00:37:49,811
ஆனால், ஒருவேளை அவன் என்னை நேசிக்கவேயில்லையோ.

470
00:37:49,811 --> 00:37:51,688
நிச்சயமா அவன் உன்னை நேசிச்சான்.

471
00:37:52,397 --> 00:37:57,277
கடவுளே, ஒருவர் இன்னொருவரை எவ்வளவு
நேசிக்க முடியுமோ, அவ்வளவு நேசிச்சான்.

472
00:37:57,277 --> 00:37:59,947
அப்போ நான் ஏன் உண்மையாகலை?

473
00:38:00,489 --> 00:38:03,659
இன்னொருவர் உன்னை நேசிப்பதால்
மட்டும் நீ நிஜமாகிவிட மாட்டாய்.

474
00:38:04,493 --> 00:38:09,957
எதையும் எதிர்பார்க்காமல், அன்புடன் நடந்துக்கும்போது
தான் நீ நிஜமாக மாறுகிறாய்.

475
00:38:11,124 --> 00:38:12,876
நீ நேத்து இரவு செய்ததுபோல.

476
00:38:15,128 --> 00:38:16,880
அதனால நான் இப்போ நிஜமா?

477
00:38:18,882 --> 00:38:24,847
ஆனால் நான் இப்போ நிஜமாக இருந்தால், எனக்கு ஏன்
தடிமனான உரோமமும், சரியான கால்களும் இல்ல?

478
00:38:25,764 --> 00:38:27,432
என்னால் ஏன் தாவ முடியல?

479
00:38:27,933 --> 00:38:32,354
கடவுளே, எங்கிருந்துதான் உங்களைப்
போன்ற பொம்மைகளுக்கு யோசனைகள் கிடைக்குதோ?

480
00:38:33,021 --> 00:38:36,441
உன் தோற்றத்துக்கும் நீ நிஜமாறதுக்கும் சம்பந்தமில்ல.

481
00:38:37,025 --> 00:38:39,403
அது உன் மனசுல என்ன இருக்குங்கறதப்
பொறுத்துதான் அது.

482
00:38:40,612 --> 00:38:44,032
நீ அந்தச் சிறுவனை நேசிச்ச,
அந்தச் சிறுவன் உன்னை நேசிச்சான்.

483
00:38:45,075 --> 00:38:46,910
உன்னை நீயே பார்த்துக்கோ, கடவுளே.

484
00:38:47,619 --> 00:38:50,038
நீ அன்பு செய்து எவ்வளவு களைச்சு போயிருக்கப் பாரு.

485
00:38:51,748 --> 00:38:54,376
மற்ற பொம்மைகள் எல்லாம் என்னைப் பார்த்து
அசிங்கமா இருப்பதாகச் சொல்றாங்க.

486
00:38:55,335 --> 00:38:57,921
அப்போ, அவங்களுக்கு எப்படி
அழகா இருப்பதுன்னு தெரியல.

487
00:38:59,131 --> 00:39:04,261
இப்போ, நீ இவ்வளவு நல்ல பையனா இருந்ததுக்கு
நான் உனக்கு ஒரு பரிசு தரப் போறேன்.

488
00:39:39,254 --> 00:39:41,965
இப்போ, வில்லியம். மணி எட்டாகுது.

489
00:39:42,925 --> 00:39:46,053
நீ 7:00 மணி ஆனவுடன் நீ ஓடி
கீழ வருவன்னு நினைச்சேன்.

490
00:39:47,888 --> 00:39:50,390
பாரு. நீ புன்னகைப் புரிவதைப் பார்க்கட்டும்.

491
00:39:51,183 --> 00:39:52,351
இது கிறிஸ்துமஸ்.

492
00:39:52,851 --> 00:39:55,646
கிறிஸ்துமஸ் நாள் அன்னிக்கு
நீ புன்னகை புரியணும். அதுதான் விதிகள்.

493
00:39:56,897 --> 00:39:57,940
அதுதான்.

494
00:39:58,815 --> 00:40:00,400
இப்போ, வா பார்க்கலாம்.

495
00:40:01,777 --> 00:40:04,196
ரொம்ப கனமா இருக்கு.
அது என்னவா இருக்கும்னு யோசிக்கிறேன்.

496
00:40:20,629 --> 00:40:23,549
நீ ஏன் உன் கோட்டையும் பூட்ஸையும் போட்டுட்டு
அதை வெளியே எடுத்துட்டுப் போகக் கூடாது.

497
00:40:24,049 --> 00:40:25,467
அதை பறக்க வைக்க முடியுமான்னு பாரு.

498
00:41:15,058 --> 00:41:16,268
ஹலோ, முயல்குட்டி.

499
00:42:09,738 --> 00:42:11,156
குட்பை, முயல்குட்டி.

500
00:42:14,701 --> 00:42:15,702
மிக்க நன்றி.

501
00:42:36,765 --> 00:42:39,017
ஹலோ, என் பெயர் வில்லியம்.

502
00:42:39,017 --> 00:42:40,561
உனக்கு விளையாடப் பிடிக்குமா?

503
00:42:52,781 --> 00:42:54,241
மார்ஜெரி வில்லியம்ஸ் எழுதிய
புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது

504
00:42:54,241 --> 00:42:55,492
ஓவியங்கள்
வில்லியம் நிக்கோல்சன்

505
00:44:06,396 --> 00:44:08,398
தமிழாக்கம் அகிலா குமார்



